கொண்டாத்தில் கர்நாடகா, கேரளா விஜய் ரசிகர்கள்..!  கவலையில் தமிழக விஜய் ரசிகர்கள்..!  

 

 நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், நடிகர் த்ரிஷா, நடிகர் சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படத்திற்கான முதல் காட்சியை காலை 09.00 மணிக்கு தான் திரையிட வேண்டும்; இறுதி காட்சி நள்ளிரவு 01.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்; ஆறு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்; உள்ளிட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வௌியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகாலை காட்சி மறுக்கப்பட்டாலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், தமிழக விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.