லியோ படத்துக்காக அஜித் டிரெண்டை ஃபோலோ செய்யும் விஜய்..!!

நடிகர் விஜய்யின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் "நா வர்றே" பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி பாடல் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் யாரும் எதிர்பாராரவிதமாக லியோ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சர்பரைஸாக வெளியிடப்பட்டுள்ளது. இது படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.


சிங்கமான விஜய், வில்லனின் கழுத்தைப்புலி கூட்டத்தை அடித்து விரட்டுவது போன்ற தோரணையில் லியோ போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் போஸ்டர் குறித்து பலரும் டிகொட் செய்து தகவல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள லியோ படத்தின் விஜய் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் பிரபாகரன் ஆகும். அவருடைய தந்தையாக சஞ்சய் தத், மனைவியாக த்ரிஷா நடித்துள்ளனர்.

லியோ படம் ஆயுத பூஜை விடுமுறை நாளில் திரைக்கு வருவது ஏற்கனவே உறுதிசெய்ய்ப்பட்டுள்ளது.