தத்துவம் பேசும் விஜய் சேதுபதி முதலில் தனது மகனுக்கு பணிவோடு பேச கற்றுக் கொடுக்க வேண்டும் - விளாசிய பிரபலம்..!
விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய படங்களில் அப்பாவுடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா. இதைத் தொடர்ந்து பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களினால் தள்ளி போய் உள்ளது.
பீனிக்ஸ் படத்தின் பட விழாவில் சூர்யா பேசிய சில பேச்சுக்கள் சர்ச்சையானது. அதாவது, அப்பா வேற நான் வேற.. போஸ்டரில் கூட சூர்யா என்று தான் போட்டுள்ளோம்.. சூர்யா விஜய் சேதுபதி என்று போடவில்லை எனக் கூறியிருந்தார். அதன் பின்பு தனக்கு தினமும் அப்பா 500 ரூவா தான் செலவுக்கு தருவதாகவும் இதனால் எப்படியாவது கஷ்டப்பட்டு சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.
இதை கேட்ட இணையவாசிகள் தினமும் 500 ரூபாய் கொடுப்பது எல்லாம் ஓவர் என்று சூர்யாவை கடுமையாக ட்ரோல் பண்ணினார்கள். இது தொடர்பில் பல மீம்ஸ், வீடியோக்களும் வைரலானது.
இந்த நிலையில் இது தொடர்பில் பேசிய சேகுவாரா கூறுகையில், சூர்யா அப்பாவின் தயவு இல்லாமல் வந்தேன் என்று கூற முடியாது. அவர் சேதுபதியின் மகன் என்பதால்தான் நடிக்க வந்தார். இதை மறுக்க முடியாது. சூர்யாவின் பேச்சு ரொம்ப ஆணவமா இருக்கு.
எனது அப்பா தினமும் 500 ரூபாய் தான் செலவுக்கு தருவார் என்று சொன்னார். பல பேர் தின சம்பளத்திற்கு நாயா பேயா கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு 200 கிடைக்கிறதே பெரிய விஷயம். ஆனால் பெருமை என்பதற்காகவே சூர்யா அப்படி சொல்லி உள்ளார்.
திடீர் பணக்காரர் என்றால் அப்படித்தான் பேசுவார்கள். அவருடைய பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லி வளர்த்திருக்க வேண்டும். அப்படி வளத்து இருந்தால் இவ்வாறு எல்லாம் பேசி இருப்பாரா? தத்துவம் பேசும் விஜய் சேதுபதி முதலில் தனது மகனுக்கு பணிவோடு பேச கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி ஆணவத்திலும் திமிரிலும் பேசிய பலர் காணாமல் போய்விட்டார்கள் என்று சூர்யா பற்றி கூறியுள்ளார்.
இதே வேளை தினமும் எனது அப்பா 500 ரூபா தான் செலவுக்கு கொடுப்பார் என்று சூர்யா ஒரு பேட்டியிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. அது போலியான செய்தி என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இது தொடர்பாக விசாரித்த போது பொய்க்கு நான் ஏன் பதில் அளிக்க வேண்டும் என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.