ராம்போவாக மாறிய விஜய் சேதுபதி ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு ! 

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், நயன்தாராவும் இந்த படத்தில் இணைந்து நடிப்பதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

ஏற்கனவே இப்படத்தின் அனிரூத் இசையில் உருவான இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


படம் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. போஸ்டரில் விஜய் சேதுபதியை ராம்போ என்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அதாவது ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹூந்திரன் என தெரிவித்துள்ளனர்.