மக்கள் செல்வனுக்கு கண்டிஷன் போட்ட விஜய் டிவி! இதெல்லாம் நியாயமே இல்லை பாஸ்..! 

 

கமலஹாசனுக்காகவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்களிடத்தில் விஜய் சேதுபதி தன் ஸ்டைலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வரும் விஜய் சேதுபதிக்கு விஜய் டிவி ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. விஜய் சேதுபதி தன் படங்களை மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களையும் ப்ரொமோட் செய்வார்.

தன் சோஷியல் மீடியா பக்கத்தி௯ல் மற்ற நடிகர்களின் படங்களையும் ப்ரோமோஷன் செய்து வருகின்றார் விஜய் சேதுபதி. இதுபோல நட்புக்காக பலருக்கு விஜய் சேதுபதி உதவியுள்ளார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கப்போகும் இந்த நூறு நாட்கள் வேறெந்த படங்களையும் ப்ரோமோஷன் செய்யக்கூடாது என விஜய் சேதுபதிக்கு விஜய் டிவி கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

பல சிறு பட்ஜெட் படங்களை விஜய் சேதுபதி ஆதரித்து வருகின்றார். அப்படி இருக்கையில் இந்த கண்டிஷனால் பல சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கும். இந்த கண்டிஷனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலர், இதெல்லாம் நியாயமே இல்லை என கூறிவருகின்றனர்