இந்த வாரமும் மாஸ் காட்டும் விஜய் டிவி சீரியல்..!
சன் டிவி, விஜய் டிவிக்கு இடையே நேரடியாகவே போட்டிகள் நிலவுகின்றன. டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பிடிப்பதற்காக புதிய புதிய சீரியல்களை வித்தியாசமான கதைக் களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றார்கள்.
இறுதியாக வெளியான டிஆர்பி ரேட்டிங் தகவல்களின்படி இதுவரை சன் டிவி சீரியல்கள் தான் முதல் ஐந்து இடத்தை பிடித்து வந்தன. ஆனால் தற்போது முதலாவது இடத்திற்கு சிறகடிக்க ஆசை சீரியலும் ஐந்தாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் முன்னேறியுள்ளன.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு சீரியல்களில் 29 வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளன. அதில் சன் டிவி சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் தலைகீழாக மாறி உள்ளன.
அதன்படி முதலாவது இடத்தை இந்த வாரமும் சிறகடிக்க ஆசை சீரியல் தக்க வைத்துள்ளது. அதேபோல பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது.
அத்துடன் சன் டிவி சீரியல் ஆன கயல் சீரியல் இரண்டாவது இடத்திலும், கடந்த பல மாதங்களாக முதலிடத்தை பெற்று வந்த சிங்கப்பெண்ணே சீரியல் நான்காவது இடத்திலும் காணப்படுகின்றது.
இவ்வாறு தற்போது விஜய் டிவி சீரியல்கள் ஆன சிறகடிக்க ஆசை சீரியலும் பாக்கியலட்சுமி சீரியலும் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளமை பாராட்டத்தக்க விடயம் ஆகும்.