விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..! மீண்டும் பிக் பாஸில் பிரதீப் ?
பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றிய விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் தரப்பு நியாயத்தை கூட சொல்ல விடாமல் அனுப்பியது சரியான அணுகுமுறை இல்லை என பலரும் கமலை வசைபாடி வருகின்றனர். கமலின் பிறந்த நாளில் கூட பிரதீப் கமலுக்கு வாழ்த்துக்கள் கூறி தீர விசாரிப்பதே மெய் என தனது குமுறலை தெரிவித்தார்.
நாளுக்கு நாள் பிரதீப்புக்கு நீதி வேண்டும் என சாதாரண ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் பிரதீப்பை மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டு வர விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் கமலே அழைத்தாலும் பிரதீப் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனவும் அவர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதீப் உள்ளே செல்லவில்லை என்றாலும் அவர் தரப்பு நியாயத்தை கேட்க அவரை மேடைக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் பல பிரதீப் ரசிகர்கள் மன குமுறல்கள் தீரும் என நம்பலாம். நடப்பதை பொருத்திருந்து பார்ப்போம்.