விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது புதிய சீரியல்..! 

 

விஜய் டிவி, சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகள் இரண்டுமே போட்டி போட்டு சீரியல்களை புதிதாக அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதன்படி சன் டிவியில் அடுத்த வாரம் முதல் மூன்று முடிச்சு என்ற சீரியல் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ளது. அண்மையில் தான் சன் டிவியில் மருமகள் என்ற புதிய சீரியல் ஆரம்பிக்கப்பட்டது. அந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகின்றது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி 'கண்மணி அன்புடன்' என்ற சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் நண்பிகளை பற்றிய கதை போல தெரிகின்றது.