சென்னையை விரும்பாத விஜய்- லியோ பட ஆடியோ ரிலீஸ் எங்கே..??

லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடத்துவது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் ப்ரோமோஷனின் போது படக்குழு அனைவரும் விஜய் சொல்படி கேட்டு நடக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் பெரியளவில் பேசப்படாமல் போய்விட்டது. அதற்கு கதையில் விஜய்யின் தலையீடு தான் காரணம் என்று கூறப்பட்டது.

மாஸ்டரை படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ பிரமாண்டமான வெற்றி பெற்றது. அப்போது பேசிய லோகேஷ் ‘விக்ரம்’ ஒரு 100% ‘லோகேஷ்’ படம் என்று கூறினார். இதையடுத்து லியோ படத்தில் மீண்டும் அவர் விஜய்யுடன் கைக்கோர்த்துள்ளார். இதன்காரணமாக இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதற்கட்டமாக லியோ பட ஷூட்டிங் காஷ்மீரில் நடத்தி முடிக்கப்பட்டது. சுமார் 54 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடத்தப்பட்டதை அடுத்து, படக்குழு அனைவரும் சென்னை திரும்பினர். தற்போது சென்னையை அடுத்துவுள்ள பணையூரில் லியோ ஷூட்டிங் நடந்து வருகிறது. 

இதற்கு பிறகு படக்குழுவினர் ஹைதராபாத் செல்கின்றனர். அங்கு விஜய், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. அத்துடன் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வெளியூரில் நடத்துவதற்கு விஜய் விரும்புகிறாராம். சென்னையை இல்லாமல் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ‘லியோ’ ஆடியோ லாஞ்ச் நடத்த விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவருடைய முடிவுக்கு படக்குழுவும் இசைவு தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கதை, திரைக்கதை உள்ளிட்ட எந்தவிதமான விவகாரங்களிலும் விஜய் தலையிடவே இல்லை. அதனால் லியோ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் விஜய்யின் பேச்சை கேட்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.