விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத் திடலிற்கு மாற்றம்..!
Dec 29, 2023, 05:35 IST
உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த், தேமுதிக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் வாழ்விலும் மிடுக்கான நடைபோட்டு வந்தார் .
இந்நிலையில் தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல் நாளை காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு மாற்றப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளதாகவும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .