இன்று முதல் படப்பிடிப்பில் விஜய்...!

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இதனுடைய அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. இதில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதால் பீஸ்ட் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதற்கான சென்னைக்கு அருகேவுள்ள தனியார் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் அமைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை குவித்தது குறிப்பிடத்தக்கது.