வைரலாகும் விஜய் நண்பரின் ’கோட்’ பட பதிவு..!

 

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் இறுதி கட்டப்பட படிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் விஜய்யின் காட்சிகள் முடிவடைந்து விட்டதாகவும் மற்ற நட்சத்திரங்களின் காட்சிகள் மட்டுமே தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஒரே ஒரு காட்சியில் மட்டும் விஜய் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாகவும் இந்த காட்சியின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கூறப்படுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர்களின் ஒருவரும் விஜய்யின் பல படங்களில் நடித்தவருமான ஸ்ரீமான் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் செப்டம்பர் மாதம் தனது 3 சிறப்பான நாட்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஒன்று விநாயகர் சதுர்த்தி, இரண்டாவது ’கோட்’ படத்தின் ரிலீஸ், மூன்றாவது தனது பிறந்த நாள் வரும் மாதம் என்று தெரிவித்துள்ள அவர் ’கோட்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’அவன் அடிச்சா அடி விழாது, இடி விழும்’ என்ற  பஞ்ச் வசனத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இவர் இன்னொரு கூல் சுரேஷ் ஆக மாறிவிட்டார் என்று இவரது பதிவுக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.