மீண்டும் தியேட்டரில் ரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் கில்லி..!

 

தரணி இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த திரைப்படமே "கில்லி" ஆகும். விஜயின் சினிமாப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். அன்றளவில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த ரஜினியின் "சந்துரமுகி" திரைப்படத்தின் ரெக்கோட்டை உடைத்து சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில்  "கில்லி" திரைப்படம் ரீரிலீஸாக உள்ளது என படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் 20 வருடங்கள் கழித்து வருகின்ற ஏப்ரல் 20 ஆம் திகதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீரிலீஸாகின்றது.