கென்னடி பட விவகாரம்- விக்ரம் மற்றும் அனுராக் காஷ்யப் இடையே மோதல்..!!

கென்னடி படத்தில் விக்ரம் நடிக்காமல் போனது குறித்து கேன்ஸ் திரைப்பட விழாவில் வருத்தம் தெரிவித்த இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு, நடிகர் விக்ரம் ட்விட்டர் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
 

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கென்னடி. இந்த படத்தின் திரையிடல் நிகழ்ச்சி கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற்றது.

அதற்கு பிறகு நேர்காணலில் பேசிய இயக்குநர் காஷ்யப், கென்னடி படத்தில் கதாநாயகனாக முன்பு நடிக்க இருந்தவர் விக்ரம். அவரை தொடர்புகொண்டு கதையை கூறுவதற்காக முயற்சித்த போது, விக்ரமிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால் வேறொருவர் ஹீரோவாக நடிக்க வேண்டியதாயிற்று என்று கூறினார்.