விக்ரம் படப்பிடிப்பு: சென்னையில் தொடக்கம்..!

 
கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. இதுகுறித்த விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தேனி மற்றும் காரைக்குடியில் நடந்து வந்தது. அங்கு கமல்ஹாசன், விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. அவர்களுடன் ஷிவானி,  மைனா நந்தினி போன்றோரும் நடித்து வந்தனர். ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வரும்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 19-ம் தேதி முதல் சென்னையில் துவங்கியுள்ளது. கமல், விஜய் சேதுபதி ஆகியோருடன் ஃபகத் பாசிலுக்கான காட்சிகளும் இந்த ஷெட்யூலில் படமாக்கப்படுகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பை விட இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.