வைரல் போட்டோஸ்..!! பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த கோட் படக்குழு..!

 

தளபதி விஜயின் அசரவைக்கும் அசத்தலான நடிப்பில் தற்போது வேற லெவலில் சிறப்பாக தரமாக உருவாகி உள்ள திரைப்படமே THE GOAT .

AGS நிறுவனம் நிறுவனத்தின் தாராள பொருட்செலவில் பல நாடுகளில் சத்தமின்றி உருவாகி வந்த இப்படத்தை வெங்கட் பிரபு தரமாக இயக்கி சிறப்பாக செதுக்கி உள்ளார்.

BGM கிங் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று ;பல சாதனைகளையும் நிகழ்த்தியது .

இந்நிலையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு இன்று நேரில் சென்றுள்ள கோட் படத்தின் படக்குழுவினர் அவரது குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளனர் .

இப்படத்தில் விஜய்காந்த் வரும் காட்சியை காட்டி அனுமதி வாங்கத்தான் இந்த சந்திப்பு நடந்திருப்பதாக ஒருபக்கம் கூறப்படுகிறது .

நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் பலரும் விஜயகாந்த் வீட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.