பிரச்சனை ஆரம்பிச்ச இடத்துல தான் அதற்கான தீர்வும் கிடைக்கும் - திரில்லர் பாணியில் வெளியான ‘விரூபாக்ஷா’ படத்தின் டீசர்..!!
சாய் தரம் தேஜ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'விரூபாக்ஷா' பான் இந்தியா படமாக வெளியாகிறது. இப்படத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சுகுமார் திரைக்கதை அமைத்துள்ளார். திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள விருபாக்ஷா திரைப்படத்திற்கு பி. அஜனீஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
சரித்திரத்தில் இது போன்று நிகழ்வுகள் ஏற்படுவது இதுவே முதல் முறை என இந்த டீசர் தொடங்குகிறது. காண்பவர்களின் ரத்தத்தை உறையவைக்கும் இந்த டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஷாம்தத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.