மார்க் ஆண்டனி படம் பார்க்க வருபவர்களுக்கு காத்திருக்கும் சர்பரைஸ்..!!

விரைவில் திரைக்கு வரவிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் தெலுங்குப் பதிப்பை காண வரும் ரசிகர்களுக்கு பெரியளவிலான சர்ப்பரைஸ் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர் தோல்விப் படங்களுக்கு பிறகு, மார்க் ஆண்டனியை விஷால் பெரிதும் நம்பியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனமீர்த்தது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் விநாயகர் சதுர்த்தி நாளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழிப் பதிப்பில் உருவாகியுள்ள படத்தில் டி. ராஜேந்தர் பாடல் பாடியுள்ளார். இதுதொடர்பான கிளிம்ப்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

அதே பாடலை மார்க் ஆண்டனி தெலுங்குப் பதிப்பிற்காக விஷால் பாடியுள்ளார். ஏற்கனவே 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டு ரிலீஸாகமல் போன எம்.ஜி.ஆர் படத்திற்காக விஷால் முதன்முதலாக பாடல் பாடினார். அதையடுத்து இரண்டாவது முறையாக மார்க் ஆண்டனி படத்துக்காக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.