எனது காதலி இவர்தான்- பகிரங்கமாக கூறிய வி.ஜே. விஷால்..!!

தொலைக்காட்சி பிரபலமான வி.ஜே. விஷால் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசும்போது பேசும்போது தனது காதலி குறித்த விபரங்களை வெளிப்படையாக கூறி அனைவரையும் சிரிப்புக்குள்ளாக்கினார். 
 


பெங்காலி மொழியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான தொடர் ஸ்ரீமோயி. இதனுடைய அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இதே நாடகம் தெலுங்கில் கஸ்தூரி நடிப்பில் ’கிரஹலட்சுமி’ என்ற பெயரில் ஒளிபரப்பானது. ஆனால் அது முடிந்துவிட்டது.

இப்போதைக்கு பாக்கியலட்சுமி சீரியல் தான் டி.ஆர்.பி-யில் முதன்மையான இடத்தில் உள்ளது. கணவனால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட ஒரு தாயின் கதை என்பதால், தமிழ் நாட்டு பெண்கள் பாக்கியலட்சுமிக்கு தங்களுடைய ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வி.ஜே. விஷாலுக்கு ஒரு பெரும் ரசிகர் வட்டமே உள்ளது. அவர் அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் “உங்களுடைய காதலி குறித்து சொல்லுங்கள்” என்கிற கேள்வியை தொகுப்பாளர் முன்வைத்தார்.

அதற்கு அவர், காதலி யார் என்று கூறாமல் நடிகை த்ரிஷாவை தான் காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை மொத்த அரங்கமும் கலாய்க்க துவங்கியது. மேலும் தான் எதற்காக த்ரிஷாவை காதலிக்கிறேன் என்று விஷால் கூறுகையில், அரங்கத்தில் சிரிப்பு நிலவியது.