ஓட்டிங் அப்டேட் : பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார் ?

 
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளது. ‌ மேலும் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.அதோடு இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, விக்ரம் மற்றும் ரவீனா என மூவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆரம்ப முதலே தொடர்ந்து விசித்ரா அதிகமான ஓட்டுக்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து ரவீனா இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறார் விக்ரம்.

ரவீனா மற்றும் விக்ரம் இடையே கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசம் இருப்பதால் நிச்சயம் விக்ரம் வெளியேறவே வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வார வெளியேற்றம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.