அட்வென்ஜர் வெப்சீரிஸ் பார்க்கணுமா? இதோ உங்களுக்கான சூப்பர் லிஸ்ட்..!
அவுட்டர் பேங்க்: நெட்பிலிக்ஸ் தளத்தில் உள்ள இந்த வெப் தொடரில் தனது நண்பர்களை அழைத்து கொண்டு ஒரு பெரிய புதையல் மற்றும் அதோடு தொடர்புடைய தொலைந்த அப்பாவையும் தேடி செல்ல இது ஒரு அட்வென்ஜர் த்ரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.
தி லைப்ரரியன்ஸ்: ஒரு பெரிய வரலாற்று நூலகத்திற்கு வேலைக்கு வரும் 4பேர் அங்கிருக்கும் பண்டைய பொருட்களை பாதுகாப்பது என இந்த தொடர் ஆக்சன் கலந்து அட்வென்ஜர் உடன் அமேசான் பிரைமில் உள்ளது.
பிளட் அண்ட் ட்ரஸர்: ஆக்சன் மற்றும் அட்வென்ஜர் கலந்த இந்த தொடரில் பழங்கால பொருட்களை திருடும் ஒருவனுடன் இணைந்து தீவிரவாதியை பிடிக்க முயற்சிக்கிறார்கள். இந்த தொடர் அமேசான் பிரைமில் உள்ளது.
ரெலிக் ஹண்டர்: வரலாற்று பேராசிரியரான ஆய்வாளர் பழைய பண்டைய பொருட்களை தேடி அவற்றை உரிய இடத்தில எப்படி சேர்க்கிறார் என்பதே இந்த தொடராகும். இது அமேசான் பிரைமில் உள்ளது.
ஒன் பீஸ்: கடற்கொள்ளையரான நாயகன் புதையலை தேடி செல்ல போகுமிடமெல்லாம் நடக்கும் ஒவ்வொரு சாகசங்களை வெப் தொடராக எடுத்துள்ளார்கள். இந்த தொடர் நெட்டபிலிக்ஸ் தளத்தில் உள்ளது.
எக்ஸ்பேடிஷன் அன்னோன்: ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் உலகம் முழுவதும் பயணம் செய்து, காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்கிறார். இந்த தொடர் அமேசான் ப்ரைம் தலத்தில் உள்ளது.