நடிகர் விஷாலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

 

டிகர் சங்கத்தின் தலைவராகவும் கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விஷால்.மேலும் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும்  குற்றங்களை தட்டி கேட்டு அதை பற்றிய கருத்துக்களை தைரியமாக தனது சோசியல் மீடியாவில் எழுப்பி வருகிறார்.

இப்படி இருக்கையில் மதுபான கடையில் கூட்டமாக நிற்கும் மது பிரியர்களை அடித்து விரட்டுவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகியது.  மேலும் அந்த வீடியோ இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது விஷால் நடித்து வரும் ரத்தம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சி என தெரியவந்தது இப்படி இருக்கையில் தமிழ்நாடு மது குடிப்போர் சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஷாலுக்கு கடும் எச்சரிக்கை..,  அரசு டாஸ்மாக் கடை முன்பாக நிற்கும் மது பிரியர்களை அடித்து விரட்டும் காட்சியை உடனே படத்திலிருந்து நீக்கு நீக்கு நீக்கு என குறிப்பிட்டுள்ளார்.