4 மணி நேரமாக மும்பை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம் - வெளியிட்ட அதிர்ச்சி பதிவு...!
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்.சமீபத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக ஒரு பாடலில் நடித்து இருந்த நிலையில், லோகேஷ் இயக்கும் 'கூலி' படத்தில் ஸ்ருதி நடித்து வருகிறார்.
தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கோபமாக பதிவொன்றை போட்டுள்ளார். அதில், "நான் சாதாரணமாக ஒரு விஷயத்திற்கு குறை சொல்லும் நபர் கிடையாது. ஆனால் இண்டிகோ நிறுவனத்தினர் இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர். கடந்த 4 மணி நேரமாக எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் மும்பை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா?" என்று பதிவிட்டுள்ளார்.
இண்டிகோ விமான நிறுவனம் இந்த பதிவிற்கு இவ்வாறு ரிப்ளை போட்டுள்ளனர் அதில், "தாமதத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மும்பையில் மோசமான வானிலை நிலவி வருவதால் விமான போக்குவரத்து தாமதமாகி உள்ளது. இது எங்கள் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பதிலளித்துள்ளனர்.