இனி ட்ரைலர்களை திரையிட மாட்டோம் - திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்..!
 

 

 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அப்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் ‘லியோ’ படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது.

அப்போது தியேட்டரில் உள்ள இருக்கைகளை உடைத்தும், ஏராளமான ரசிகர்கள் இருக்கையின் மீது ஏறி விளையாடியும் சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி இருந்தது. இந்த நிலையில் திரைப்பட ட்ரைலர்களை தனிப்பட்ட முறையில் ஒலிபரப்பு செய்வதில்லை என்ற முடிவை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் திருப்பூர் சுப்பிரமணியம், தனியாக ட்ரைலர் வெளியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். லியோ படத்திற்கு ட்ரைலர் போட்டபோது 4 தியேட்டர்களில் சீட்களை உடைத்து எரிந்தார்கள். ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் குவிந்துள்ளனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள்தன பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ட்ரைலர்களை தனியாக ஒலிபரப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்கள் கைபேசியிலேயே பார்த்துக் கொள்ளட்டும். ஆயிரம் பேர் கூடும் இடத்தில் 500 பேரை பாதுகாப்புக்காக போட முடியுமா? இந்த 2 நிமிட காட்சிகளுக்காக இரண்டு மணி நேரம் திட்டமிட்ட வேண்டி உள்ளது. அதே போல் வரும் பார்வையாளர்களும் ஒழுக்கமாக நடந்து கொள்வது இல்லை என கூறினார்.