இது என்னப்பா புது ட்விஸ்ட்..! கோடி கணக்கில் வியூஸ் ஆனா ஒரு ரூபா கூட கைக்கு வரல..! 

 

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரகா வலம் வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது இசைக்கும் குரலுக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் தெருக்குரல் அறிவு குரலில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான பாடல் என்ஜாய் எஞ்சாமி.

பட்டி தொட்டி எங்கும் ஓயாமல் ஒலித்த இப்பாடல் உலகம் முழுவதும் செம வைரலா ஆனது . இப்பாடல் கோடிக்கணக்கில் வியூஸ் போய் மாபெயரம் சாதனைகளை படைத்தது.

ஆனால் இந்த பாடல் தொடர்பாக சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு இடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டு இருவரும் தற்போது பேசிக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சந்தோஷ் நாராயணன் . அதில் மியூசிக் நிறுவனம் இதுவரை ஒருரூபாய் கூட தரவில்லை என புகார் கூறி இருக்கிறார்.

ஒரு பில்லியன் ரசிகர்களுக்கும் மேல் பார்க்கப்பட்ட பாடலுக்காக ஆர்டிஸ்டுகளுக்கு ஒரு ருபாய் கூட இதுவரை வரவில்லை என மிகவும் வருத்தத்துடன் சந்தோஷ் நாராயணன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.