இது என்னபா புது ட்விஸ்ட்..! ‘லியோ’ படம் LCU -விற்கு கீழ் வராதா!?

 

மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் வெளியிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி  உருவாகியுள்ள படம் லியோ.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் டோலிவுட் சினிமாவில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU )என்ற ஒரு கான்செப்ட் உருவாக்கி கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இயக்கி வருகிறார்.

அதன்படி விஜயும் லியோ திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCU விற்கு கீழ் வருமா என்பதை அறிய ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை லியோ படத்தில் மிரட்டலான டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் LCU சம்பந்தமான எந்த ஒரு ஹின்ட்டும் ட்ரைலரில் இல்லை என்று ரசிகர்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.

இருந்த போதிலும் LCU சம்பந்தமான காட்சிகளை படக்குழுவினர்கள் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார்கள் என்றும் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.