என்னடா பண்ணி வெச்சி இருக்கீங்க..! பால்குடம் எடுக்கும் மியா கலிஃபா..! 

 

 அம்மனுக்கு பால்குடம் எடுப்பது போல நடிகை மியா கலிஃபாவின் புகைப்படத்தை அச்சிட்டு பேனர் அடித்துள்ளார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லெபனான் நாட்டில் பிறந்த மியா கலிஃபா அமெரிக்காவில் வசித்து வருகின்றார். இவர் ஆபாச படம்  நடித்து மிகவும் பிரபலமானார். இவருக்கு பல எதிர்ப்புகளும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டது. தற்போது ஆபாச படங்களில் நடிக்காமல் வேறு தொழில்களை தொடங்கி நடத்தி வருகின்றார்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்காக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பேனர் அடித்துள்ளார்கள். அந்த பேனரின் மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தையும் இளைஞர்கள் அச்சத்துள்ளார்கள்.

மேலும் அந்த பேனரில் தங்களுடைய ஆதார் கார்டு வடிவில் தங்களது பெயர், வயது உள்ளிட்ட விபரங்களையும் இளைஞர்கள் அச்சடித்து உள்ளார்கள்.