என்ன சார் கொழப்புறீங்க..! ரஜினி படத்துடன் மோதும் அளவுக்கு எங்களுக்கு தகுதியே இல்லை - கங்குவா இயக்குனர்..!  

 

 ‘கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் கூறியதாவது  

’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதே தேதியில் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினியுடன் மோத தயாரா நீங்கள் என்ன கேட்ட கேள்விக்கு 

நாங்கள் விசாரித்த வரை ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் தீபாவளிக்கு வருவதாக தான் நான் கூறப்பட்டது. எனவே அக்டோபர் 10ஆம் தேதி வேறு எந்த பெரிய படமும் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு தான் நாங்கள் அந்த தேதியை அறிவித்தோம். ரஜினி படத்துடன் மோத வேண்டும் என்பது எங்களுக்கு ஐடியாவே கிடையாது அதற்கு தகுதியும் கிடையாது.

நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர்,  நான் என்னுடைய பிறந்தநாளுக்கு கூட சாமி இடம் வேண்டியது இல்லை, ஆனால் ரஜினியின் பிறந்தநாள் அன்று ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று 108 தடவை சுற்றி வருவேன். அந்த அளவுக்கு நான் ரஜினியின் தீவிரமான ரசிகர். அப்படி இருக்கும்போது ரஜினி படத்துடன் நான் மோதுவேன் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டாலும் தீபாவளிக்கு தான் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து அக்டோபர் 10ஆம் தேதியை நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று ஞானவேல் ராஜா உறுதிபடக் கூறியுள்ளார்.