என்ன நயன் நீங்களா இப்படி..? என்ன இப்படி மாறிட்டீங்க...  

 

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த திரைப்படம் ’நேசிப்பாயா’. இந்த படத்தின் டைட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்துகொண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது ’நான் பொதுவாக என்னுடைய படங்களின் விழாவுக்கு கூட செல்ல மாட்டேன், ஆனால் விஷ்ணுவர்தன் என்னுடைய விருப்பத்துக்குரிய இயக்குனர் என்பதால் அவர் என்னிடம் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை, அதனால்தான் இந்த விழாவில் கலந்து கொண்டேன்’ என்று கூறினார்.

இதனை அடுத்து ’நேசிப்பாயா’ ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை அவர் வெளியிட்ட நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.