என்னங்க சொல்றீங்க..!! ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணமா..?
தனது இடுப்பழகை காட்டி ரம்யா பாண்டி நடத்திய அந்த போட்டோஷூட் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனதோடு அது ஒரு ட்ரெண்டிங் செட்டாகவும் மாறியது. அவரைப் பார்த்து பலரும் காப்பியடித்து மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தினார்கள். இதனால் ரம்யா பாண்டியணுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றினார். ஆனாலும் இறுதி நூலிலையில் டைட்டில் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார். அதன் பின்பு பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பைனல் வரை சென்று அசத்தினார். அதற்கு பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இதைத்தொடர்ந்து படிப்படியாக ரம்யாவுக்கு பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. பட வாய்ப்புகள் குறையவே பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிலையில், ரம்யா பாண்டியன் காதல் திருமணம் செய்ய உள்ளாராம். அதன்படி லோவல் தவான் என்கிற யோகா பயிற்சியாளரை அடுத்த மாதம் கரம்பிடிக்க உள்ளாராம்.
நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார். அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதனால் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணத்துக்கு தயாராகிவிட்டார் ரம்யா.
அதன்படி இவர்களுடைய திருமணம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் நடைபெற உள்ளதாம். இதை அடுத்து நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் இவர்களுடைய திருமண வரவேற்பும் நடைபெற உள்ளது.