நடிகைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? 

 

கேரள திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகளை அளித்தது? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. 

நடிகர் சித்திக்கின் மேல் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னை ரூபம் எடுத்ததை தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜிநாமா செய்தனர்.

இந்த நிலையில், நடிகரும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ்கோபியிடம் இப்பிரச்னைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ ஹேமா கமிஷன் மூலம் ஊடகங்களுக்கு தீனி கிடைத்துள்ளது. நடிகைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? யார் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர ஊடகங்கள் அல்ல. நீங்கள் (ஊடகங்கள்) யுத்தத்தை உருவாக்கி ரத்தத்தை குடிக்கிறீர்கள். இதை கையிலெடுத்து பலரும் சம்பாதிக்கின்றனர். திட்டமிட்டு மலையாள சினிமாவை அழிக்க முயற்சிக்கின்றனர். என ஆவேசமாக தன் கருத்துகளை கூறியுள்ளார்.