இந்த படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது - விளக்கம் கொடுத்த மகேஷ் பாபு..!

 
நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குண்டூர் காரம்’. இந்த படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

‘குண்டூர் காரம்’ திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு பீடி குடித்தது சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், \”குண்டூர் காரம் திரைப்படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிட்டது. பின்னர் தான் இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். அது நன்றாக இருந்ததால் படம் முழுவதும் பயன்படுத்தினோம். நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்” என்று கூறினார்.