என்ன அர்ஜுன் சார்...! சினிமாவில் இருந்து சீரியல் பக்கம் வந்துட்டீங்க..!

 

தமிழில் வெளியான ஜென்டில்மேன், ரிதம், முதல்வன், ஏழுமலை, ஜெய்ஹிந்த் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், தற்போது சமீப காலமாகவே முன்ணனி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் இறுதியாக லியோ  படம் வெளியான நிலையில், தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து  வருகின்றார். இது தவிர விருந்து, தீயவர்கள் குலை நடுங்க என்ற படத்திலும் நடித்துள்ளார்.அண்மையில் தான் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

இந்த நிலையில், அர்ஜுன் கூடிய விரைவில் சீரியலில் களமிறங்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.அதாவது அர்ஜுன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில்  சீரியல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூடிய விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் யார் எனவும் வெளியாகும் என கூறப்படுகிறது.