எங்களை லேடி சூப்பர்ஸ்டார் குரங்கோடு ஒப்பிட்டுப் பேச என்ன காரணம்...? வலைப்பேச்சு டீம்..!
சமீபத்தில் நயன்தாராவின் பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படம் வெளியானது. இதில் நானும் ரவுடிதான் படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தனுஷ் ஒப்புதல் தராமலேயே சில காட்சிகள் ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டிருந்ததால் தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட வலைப்பேச்சு குழுவினர், தனுஷ் பக்கம் நியாயம் இருப்பதாக கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நயன்தாரா அளித்திருந்த போட்டி ஒன்றில், தன்னை பற்றி அவதூறு பரப்பும் மூன்று நபர்கள் வெளியிடும் 50 வீடியோக்களில் 45 வீடியோக்களில் தன்னைப் பற்றிய செய்திதான் இருக்கும் என்றும், தன்னைப் பற்றி பேசுவதால் அவர்களுக்கு வருமானம் வருவதாகவும் விமர்சித்திருந்தார்.
மேலும், இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு ’நல்லதை கேள், நல்லதை பார், நல்லதை பேசு’ என்ற மூன்று குரங்குகள் தான் ஞாபகம் வருகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்திருந்த அந்தணன், எங்கள் மூவரையும் குரங்குகள் என நயன்தாரா அடையாளப்படுத்துவது எப்படி நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த பத்திரிகையாளர் பிஸ்மி, ”நயன்தாரா எங்களை குரங்கோடு ஒப்பிட்டுப் பேசக்காரணம், அவரின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட பல விஷயங்கள் எங்களுக்கு தெரியும் என்பது அவருக்குத் தெரியும். இதையெல்லாம் நாங்கள் வெளியே சொல்லிவிடுவோமோ என்ற பயத்தில் நயன்தாரா பேசியிருக்கலாம்.
ஐயா படத்தில் நடிப்பதற்கான ஆடிசனில் கலந்து கொள்ள கேரளாவிலிருந்து கோயம்பேடுக்கு பேருந்தில் வந்தார் நயன்தாரா. விமானத்திலோ, ராக்கெட்டிலோ வந்தவர் இல்லை. சென்னைக்கு வந்தவருக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. பி.ஆர்.ஓ. ஒருவர்தான் நயன்தாராவை அழைத்து வந்து வடபழனியில் உள்ள ஓட்டலில் தங்க வைத்தார்.
அவர் சொல்லும் அனைத்து பொய்களையும் உலகம் நம்பும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையில் நயன்தாரா இருக்கிறார்.” என்று பிஸ்மி விமர்சித்துள்ளார்.