படத்தின் கதைக்கு அவசியம் இருந்தால் நிர்வாணமாக நடிப்பதில் என்ன தவறு..!! 

 

தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் நடித்து வரும் நடிகை பிந்து மாதவி. ‘பொக்கிஷம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு படவாய்ப்பு குறைந்ததால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து வரும் பிந்து மாதவி,  ’யாருக்கும் அஞ்சேல்’ ‘மாயன்’, ’பகைவனுக்கு அருள்வாய்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கு பிக்பாஸில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னராக தேர்வானார். 

ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து வந்த அவர், வாய்ப்பு இல்லாததால் கிளாமர் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஹீரோயின்கள் நிர்வாணமாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகைகள் பட வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிப்பதில்லை. ஆனால் படத்தின் கதைக்கு அவசியம் இருந்தால் அப்படி நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதுபோன்ற கதாபாத்திரம் வந்தால் நானும் நிச்சயம் நடிப்பேன் என்று பிந்து மாதவி கூறினார். அவரின் கருத்து ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.