உண்மையில் என்ன நடந்தது? நயன்தாரா தனுஷ் சர்ச்சை குறித்து போட்டுடைத்த பிஸ்மி!
எங்கள் ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதிக்கவில்லை எனவும், அந்த படத்தில் இருந்து 3 நொடி காட்சியை பயன்படுத்த, தயாரிப்பாளரான தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் நடிகை நயன்தாரா.
நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும், தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.
இவ்விவகாரத்தில் சிலர் தனுஷுக்கும், சிலர் நயன்தாராவுக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விஷயம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், “இந்த விவகாரத்தில் தனுஷ் மீது தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் தனுஷிடம் முறைப்படி அணுகியிருக்க வேண்டும். ஆனால் விக்னேஷ் சிவனோ தனுஷின் மேனேஜருக்கு ஃபோன் செய்து அவருக்கு தெரியாமல் சான்றிதழை கேட்டார். அவர் மறுத்துவிட்டார். ஏற்கனவே 4 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட நானும் ரௌடிதான் படத்தை 17 கோடி ரூபாய்க்கு இழுத்துவிட்டதால் விக்னேஷ் சிவனுடன் தனுஷ் பேசாமல் இருந்தார்.
மிரட்டினார்கள்: இப்போதோ தனக்கே தெரியாமல் சான்றிதழை வாங்க முயற்சி செய்த விஷயம் தனுஷின் காதுகளுக்கு சென்று அவரை மேலும் கடுப்பேற்றிவிட்டது. என்னால் தர முடியாது என்று சொல்லிவிட்டார். அதனையடுத்து உயர் அதிகாரிகள் எல்லாம் விக்னேஷ் சிவனுக்காக பேசினார்கள். அப்போது தனுஷ் தன்னால் முடியாது என்று கூறிவிட்டார். ஒருகட்டத்தில் அவரிடம் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து எங்களுக்கு அந்த சான்றிதழை தராவிட்டால் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து உங்கள் இமேஜை டேமேஜ் செய்வோம் என்று மிரட்டினார்கள். அது தனுஷை மேலும் கோபப்படுத்தியது. மேலும் உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்க என்று தனுஷ் அவர்களிடம் சொல்லிவிட்டார்”