துபாயில் உயிரை பணயம் வைத்து சதீஷ் செய்த காரியம்..!
நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த ’நாய் சேகர்’ ’காஞ்சுரிங் கண்ணப்பன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் ’வித்தைக்காரன்’ என்ற படமும் வெளியானது. இதனை அடுத்து சில படங்களில் ஹீரோவாக நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சதீஷ் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு அவர் உயரமான கட்டடத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். குதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவரை சில கேள்விகள் கேட்பதை பார்க்கும்போது ’என்னடா மரணம் வாக்குமூலம் மாதிரி வாங்குறீங்களே’ என்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
மேலும் இந்த பதிவில் அவர் ’அவ்வளவு பயம் எல்லாம் இல்லை’ என்று பதிவு செய்துள்ளதை அடுத்து நீங்களும் சென்னையில் இதே போன்ற ஒன்று ஆரம்பியுங்கள் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. உயிரை பணயம் சதீஷ் உயரமான கட்டிடங்களுக்கு இடையே பாராசூட்டில் பறந்து வரும் இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.