அசைவ உணவு குறித்து வெற்றிமாறன் சொல்வதென்ன..!
தமிழ் சினிமாவில் இருக்கும் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக ஒருபவர் இயக்குநர் வெற்றி மாறன். இவர் எடுக்கும் படங்களுக்கும் இவரது மேடை பேச்சுக்கும் ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.
இந்நிலையில் தனியார் உணவக திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது :
ஒரு தலைமுறையை தீர்மானிப்பது, அந்த தலைமுறை சிறுவயதில் சாப்பிடும் உணவு தான். உணவால் நிறைய பிரச்சினைகள் வந்துள்ளன. இன்றைக்கும் வந்துகொண்டு தான் இருக்கின்றன.
உணவின் தரம், சமையலின் தரம் ஆகியவற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தி தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது நாம் இருக்கிறோம்.
இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. ஆனால், இன்றைக்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது. நானும் நிறைய இறைச்சி உண்பவன் தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.