‘சமந்தாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படியெல்லாம் புகைப்படத்தை வெளியிடுகிறார்?’
May 8, 2024, 05:35 IST
மயோசிடீஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவிற்கு அவ்வப்போது ஓய்வு தந்துவிட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இப்போது புது தெரபி ஒன்றை பெறுவதாகக் கூறி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை வெளிட்டார். அதில் பாத்ரூமில் நிர்வாண கோலத்தில் அவர் அமர்ந்திருக்கும் போட்டோ இடம்பெற்றது. இதைப் பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ‘சமந்தாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படியெல்லாம் புகைப்படத்தை வெளியிடுகிறார்?’ என தங்களது கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனே தனது நிர்வாண போட்டோவை அவர் நீக்கிவிட்டார். இதுவரை சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ள சமந்தா, இதுபோன்ற போட்டோவை எப்போதும் வெளியிட்டது கிடையாது. இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.