எல்லாரும் எல்லாமும் உன்னை கைவிடும் போது உன்னை நம்பு - வெளியான விடாமுயற்சி படத்தின் டீசர்..! 

 

விடாமுயற்சி படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் , ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 2023 இல் தொடங்கியது. தற்போது பெரும்பாலும் அர்பைஜானில் படமாக்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கார் பந்தயங்களில் போட்டியிட்டு வருகின்றார் சமீபத்தில் கூட அவர் விஜய்யின் கட்சி நிற காரில் அவர் பந்தயம் செய்த காணொளிகள் இணையத்தை வைரலாக்கியிருந்தன.அது ஒரு புறம் இருக்க அஜித்தின் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பான 'விடாமுயற்சி' படத்தின் டீசர் வெளியானது 

அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார் சேஸிங், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகல் டீசரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் ஹாலிவுட் த்ரில்லர் பாணியிலான காட்சியமைப்புகளும் நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் டீசரை இன்னும் சற்றே சுவாரஸ்யமாக கட் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறவைக்கும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் டீசரில் இல்லை.

அஜித் வழக்கம்போல ஸ்டைலிஷ் ஆன லுக்கில் இருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரமாக சொல்லப்பட்ட ஆரவ் டீசரில் இடம்பெறவில்லை. அநேகமா முதல் காட்சியில் அர்ஜுன் குழு இழுத்துப் போட்ட அந்த நபர் ஆரவ் ஆக இருக்கலாம். அனிருத்தின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. ஓம் பிரகாஷின் கேமரா ஒரு த்ரில்லர் படத்துக்கான அடர்த்தியான காட்சிகளை கண்முன் நிறுத்தும் என்று நம்பலாம். 

<a href=https://youtube.com/embed/Wtq3RRORVx4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Wtq3RRORVx4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">