சீரியலில் நடிக்க சான்ஸ் கேட்டதும் நண்பனே அந்த மாதிரி பேச ஆரம்பித்துவிட்டான் : பிரபல நடிகை வேதனை..!

 
சின்னத்திரை தொடரில் நடித்து வந்த நடிகை காஜல் பசுபதி 2004-ல் கமல் நடிப்பில் வெளியான ‘வசூல் ராஜா எம்எம்பிஎஸ்’ படத்தின் மூலம் பெரியத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, இதயத்திருடன், டிஸ்யூம், சுப்புரமணியபுரம், சிங்கம் , கோ போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பின் அவரை விவாகரத்து செய்தார். சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் சீசன் சென்றது போலவே, இவரும் ‘வைல்ட் கார்டு’ போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று, சிறிது நாள் அங்கு தாக்குப்பிடித்தார்.

கறார் பேச்சு மூலம் அறியப்படும் இவர், துணிந்து பல கருத்துக்களை முன்வைக்க கூடியவர். அடிக்கடி பரபரப்பான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, துணிந்து அதை எதிர்கொள்பவர்.

இந்நிலையில், இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது நெருங்கிய தோழியின் காதலருக்கு ஒரு தொலைக்காட்சி சேனலின் தலைமை பொறுப்பில் இருப்பவருடன் நல்ல நட்பு உள்ளதால் அவரிடம் சீரியலில் நடிக்க ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என கேட்டு சொல்லுமாறு உதவி கேட்டேன்.

அதுவரை மரியாதையாக பேசிய அவர் சான்ஸ் கேட்டப் பிறகு நள்ளிரவில் போன் செய்து, தனக்கு இப்படி ஒரு பெண் வேண்டும் என சில அடையாளங்களை கூறி மோசமாக பேசியுள்ளார். அந்த சம்பவத்துக்கு பிறகு யாரிடமும் வாய்ப்பு கேட்க விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார்.