’தலைவி’ படம் வெளியீட்டு எப்போது..? கங்கனா பதில்..!

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு ‘தலைவி’ படத்தின் வெளியீடு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகமல் உள்ளது, படத்தை எதிர்நோக்கியுள்ள ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை, அரசியல் தலைவர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார்.

தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றன.

முன்னதாக மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால், தலைவி படத்தில் வெளியீடு கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்டாவில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை கங்கனா, நாடு முழுவதும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது தலைவி படம் வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆகஸ்டுக்கு பிறகு வரக்கூடிய விழாக்கால நாட்களில் இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.