லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன் ? ஓப்பனாக பேசிய அனிகா சுரேந்திரன்!
'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இளம் நடிகை அனிகா சுரேந்திரன். அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாரா மகளாக நடித்து மேலும் பிரபலமானார், அஜித் மகள் என்று சொன்னாலே அனிகா முகம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும் என்கிற அளவிற்கு இவர் தமிழ் திரையுலகில் பிரபலமாகிவிட்டார்.
இதையடுத்து 18 வயதான அனிகா, சமீபகாலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் ‘புட்ட பொம்மா’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தையடுத்து ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் லிப்டாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் அனிகா நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக தனக்கு எதிராக உருவாகியுள்ள சர்ச்சைகளுக்கு அனிகா விளக்கமளித்துள்ளார். 'ஓ மை டார்லிங்' ஒரு முழு நீள காதல் படமாகும். இந்த கதையயம்சம் கொண்ட படத்தில் முத்தக் காட்சிகளையும், நெருக்கமான காட்சிகளையும் தவிர்க்க முடியாது என்பதையும் நெருக்கமான காட்சிகளின் முக்கியத்துவத்தையும் படத்தின் ஸ்க்ரிப்டை விவரிக்கையில் படத்தின் இயக்குனர் என்னிடம் கூறினார்.
கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதுபோன்ற காட்சியில் நடிக்க சம்மதித்தேன், கண்டிப்பாக படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆபாசமாக இருக்காது என்றும், படத்தை பார்க்கும்போது பார்வையாளர்கள் அதனை புரிந்துகொள்வார்கள் என்றும் நடிகை அனிகா விளக்கமளித்துள்ளார்.