நயன்தாரா ஏன் அங்கே போனாரு..? பிரபலம் நச்..!

 

மாதவனும், அவரது மனைவியும் போர்வையை போர்த்திக் கொண்டு உல்லாச படகில் தலையை மட்டும் வெளியே காட்டி எட்டிப்பார்க்கிறார்கள். இந்தபக்கம் ரூமில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளுடன் பொழுதை போக்கி கொண்டிருக்கிறார்கள். எதற்காக மாதவனும், அந்த படகில் குடும்பத்துடன் பயணம் செய்கிறார் என்றால், மாதவன் தன்னுடைய புதிய படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி கொண்டிருக்கிறார். அந்த உல்லாச படகை சொந்தமாக விலைக்கு வாங்கியிருக்கிறார் மாதவன். 14 கோடி ரூபாய்கு வாங்கியிருக்கிறார். எப்போதெல்லாம் தனக்கு படப்பிடிப்பு இல்லையோ, அப்போதெல்லாம் அங்கே போய் தங்கியிருந்து தன்னுடைய படத்துக்கு கதை வசனம் எழுதி வருகிறார்.

புத்தாண்டை அந்த உல்லாச படகில் கொண்டாட விரும்பினார் நயன்தாரா,.. இதற்கு மாதவனும் சம்மதித்தார்.. ஏனென்றால், மாதவனும், நயன்தாராவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். மாதவன் உல்லாச படகில் நயன்தாரா, ஏன் அங்கு போய் தங்கினார் என்று இப்போது உங்களுக்கெல்லாம் தெரியுதா சாமி? சொன்னா புரிஞ்சுக்குங்க" என்று பயில்வான் ரங்கநாதன் அதில் கூறியிருக்கிறார்.

கடந்த 2022ம் ஆண்டு ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாதவன், அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலையில் பிஸியாக இருக்கிறார். மாதவன், நயன்தாரா இணைந்து நடிக்க போகும் படத்துக்கு டெஸ்ட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், மாதவனின் உல்லாச படகு போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. இந்த படகை இயக்குவதற்கான லைசென்ஸ் வாங்கி இருக்கிறாராம் மாதவன்.. இதற்காகவே 6 மாதம் பயிற்சியும் பெற்று லைசென்ஸ் வாங்கியுள்ளாராம்.. இந்த சொகுசு படகின் விலை 14 கோடி. அதாவது ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை விட, இந்த உல்லாச படகின் விலை அதிகமாம்.