பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து விலகியது ஏன் ? கரு.பழனியப்பன் ஓபன் டாக்..!  

 

கடந்த சில ஆண்டுகளாக ’வா தமிழா வா’ என்ற நிகழ்ச்சியை கலைஞர் டிவியில் தொகுத்து வழங்கிய கரு பழனியப்பன் இப்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா, அரசியல், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் கைதேர்ந்தவர் என்று கூறப்பட்ட கரு பழனியப்பன் திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்து கூறிய போது ’நான் விலகியதற்கு எந்தவிதமான சர்ச்சைக்குரிய காரணமும் இல்லை, எனக்கு பணிச்சுமையை அதிகமாக இருக்கிறது, அதனால் தான் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகினேன், என்று கூறியுள்ளார்.

ஆனால் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கிறது? கரு பழனியப்பனுக்கு தற்போது ஒரு படம் கூட திரையில் இல்லை, நடிக்கவும் இல்லை, படங்கள் இயக்கவும் இல்லை, இவருக்கு என்ன பணிச்சுமை இருக்கப் போகிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் ’வா தமிழா வா’ என்ற நிகழ்ச்சி குறித்த புதிய புரமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரிக்கு அதிக அளவில் மக்கள் செல்வாக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இருந்த நிலையில் தற்போது இந்த புதிய நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவுள்ளார். கரு பழனியப்பன் போல் அவர் தொகுத்து வழங்குவாரா? நிகழ்ச்சி எப்படி செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.