நீ அழகாத்தான இருக்க ராசா ஏன் இப்படி உன்னை சொல்றாங்க! கதறி அழுத யோகி பாபுவின் அம்மா..

 

 யோகி பாபு பல படங்களில் நடித்து வருகின்றார்..நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி யோகி பாபு கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து மாஸ் காட்டுகிறார்.

அப்படி அவர் நடிக்கும் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகின்றது.இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் யோகி பாபு தன் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இதையடுத்து ரஜினியின் ஜெயிலர் உட்பட பல படங்களில் தற்போது யோகி பாபு பிசியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இன்று யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் யோகி பாபு அவரின் தாயுடன் படம் பார்க்க சென்ற ஒரு சம்பவம் தான் தற்போது வெளியாகியுள்ளது..அவர் லொள்ளு சபாவில் கடின உழைப்பை போட்டு நடிக்க வந்தார்…படவாய்ப்புகளுக்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து வந்தார் யோகி பாபு ஆனால் அவருக்கு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது.இந்நிலையில் யாமிருக்க பயமேன் என்ற படத்தின் மூலம்தான் யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அந்த படத்தை பார்க்க தன் தாயுடன் யாமிருக்க பயமேன் என்ற படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றார் யோகி பாபு.

அப்படத்தில் யோகி பாபுவை அனைவரும் பண்ணி மூஞ்சி வாயேன் என்றுதான் அழைப்பார்கள். இதைக்கேட்ட யோகி பாபுவின் தாய் திரையரங்கிலேயே கதறி அழுதுள்ளார்.அது யோகி பாபுவை ரொம்பவும் பாதித்துள்ளது..

நீ அழகத்தான் இருக்க அப்புறம் ஏன் உன்னை பண்ணி மூஞ்சி வாயேன் என சொல்றாங்க என கதறி அழுதுள்ளார் யோகி பாபுவின் தாய். இதையடுத்து இதெல்லாம் வெறும் நகைச்சுவைக்காக தான் அம்மா என கூறி தன்னுடைய தாயிற்கு ஆறுதல் கூறியுள்ளார் அவர்..இந்த பிறந்த நாளில் இந்த செய்தி வைரல் ஆகி வருகிறது…