"ஆவேஷம்" பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது இவரா ?
Aug 7, 2024, 08:05 IST
மலையாளம் சினிமாவில் வெளியாகும் அடுத்தடுத்த படங்களின் வெற்றி மலையாள சினிமாவிற்கான ஓர் அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
இவ்வாறு மலையாளத்தில் வெளியாகி பெரும் பாராட்டை பெற்று 150 கோடிக்கும் மேலான வசூலை பெற்றிருந்த திரைப்படமான "ஆவேஷம்" திரைப்படம் மலையாளம் தாண்டி இந்திய திரைத்துறையில் பெரிதாக பேசப்பட்டுள்ளதுடன் பஹத் பாசிலின் நடிப்பும் பாராட்டை பெற்றுள்ளது.
இந்நிலையில் "ஆவேஷம்" தெலுங்கில் ரீமேக்காவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தெலுங்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் காணப்படுகிறது.இவ்வாறிருக்கையில் "ஆவேஷம்" தெலுங்கு ரீமேக்க்கில் பஹத் பாசிலின் பாத்திரமான ரங்கா அண்ணாவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலய்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.