நடிகரின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற பெண்..! 

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பிரபலங்கள் ஏற்கனவே பிரபலமாக காணப்பட்டாலும் இவர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றது. அதில் பாலாஜி முருகதாஸுக்கும் முக்கியமான பங்கு உண்டு. இவர் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர்.

குறித்த சீசனில் நடிகர் ஆரிக்கு சரியான போட்டியாக அமைந்த பாலாஜிக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் குவிந்தது. ஆனாலும் அவருக்கு அதிகமாக வாய்ப்பு கிடைக்க அவரை அல்டிமேட்டில் தயாரிப்பு குழு இறக்கியது. பொதுவாகவே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற போட்டியாளர்கள் மீண்டும் வரும்போது அதற்கு அதிக அளவில் தான் பிரச்சனையை சந்திப்பார்கள்.

ஆனாலும் பாலாஜி விஷயத்தில் இது தலைகீழாக காணப்பட்டது. இவர் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் அந்த சீசனில் வின்னர் டைட்டிலையும் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில், பாலாஜி முருகதாஸ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி, அவர் ஃபயர் பெயர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ரட்சிதா மகாலட்சுமியும் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் நிறைய பெண்களை ஏமாற்றி அவர்களிடம் முறையற்று நடந்து கொண்ட இளைஞர் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாலாஜி தான் அந்த இளைஞனாக முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

<a href=https://youtube.com/embed/V7uu_11zi2U?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/V7uu_11zi2U/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இவ்வாறான நிலையில் இந்த படத்தின் பெண்களுக்கான பிரத்தியேக பிரிவியூ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த போது அங்கு அந்தப் படத்தைப் பார்த்த பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர் பாலாஜியை வசைப்பாடி அவருடைய சட்டையைப் பிடித்து சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

எனினும் இந்த வீடியோ உண்மைதானா இல்லை என்றால் படத்தின் ப்ரோமோஷனுகாக எடுக்கப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி  எழுப்பி வருகின்றார்கள். தற்போது குறித்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.