எழுதிக் கொடுங்கள். அப்போ தான் அமரன் படத்தில் நடிப்பேன்  - ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட சாய் பல்லவி..! 

 

சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ வீரராக நடித்திருக்கும் அமரன் படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி.

இந்த படத்தை இதுவரை பார்த்த எல்லோரும் கண்கலங்கியபடி தான் தியேட்டர் விட்டு வெளியே வந்தனர்.  ஆகமொத்தத்தில் இந்த தீபாவளி மனதை உருக்கும் தீபாவளியாக தான் இருக்கப்போகிறது.

சாய்பல்லவி அமரன் படத்தில் இந்து கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தயங்கியிருக்கிறார். தன் தயக்கத்தை அவர் இயக்குனரிடம் சொல்ல அவரோ நீங்கள் இந்துவை சந்தித்து பேசிவிட்டு வந்து ஸ்க்ரிப்ட்டை மீண்டும் படிக்கவும் என கூறியிருக்கிறார்.

மறைந்த மேஜர் முகுந்தின் மனைவி இந்துவை பார்த்ததும் இம்பிரஸாகி நான் அமரன் படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என ராஜ்குமார் பெரியசாமியிடம் கூறியிருக்கிறார் சாய் பல்லவி. ஆனால் கூடவே ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் சாய் பல்லவி.பயோபிக், அதுவும் ஹீரோவை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் நீளமாக இருக்கிறது என்று நினைத்தால் ஹீரோயின் வரும் காட்சிகளை தான் வெட்டித் தூக்கிப் போட்டுவிடுவார்கள். 

என் கதாபாத்திரத்தை அப்படி செய்ய மாட்டேன் என எழுதிக் கொடுங்கள்.  நான் நடிக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார். உங்கள் கதாபாத்திரமான இந்து ரெபகா வர்கீஸ்-மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரம் போன்றே முக்கியமானது என கூறியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.  சாய் பல்லவி சொன்னபடி கையெழுத்து போட்டு கொடுத்த பின்பு தான் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.