கிரேஸி மோகன் மனைவி திடீர் மரணம்- கமல் இரங்கல்..!!
 

மறைந்த கிரேஸி மோகனின் மனைவி நளினி உயிரிழந்த தகவலை நடிகர் கமல்ஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 
 

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் கிரேஸி மோகன். நாடகக் கலைஞராகவும் நகைச்சுவை நடிகராகவும் பன்முகத்தன்மையுடன் விளங்கினார்.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். கமல்ஹாசனின் பல்வேறு படங்களுக்கு எழுத்தாளராக கிரேஸி மோகன் இருந்துள்ளார். மேலும் அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திலும் கிரேஸி மோகனுக்கு முக்கிய பங்குண்டு. 

அதனால் அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்றார். இந்நிலையில் கிரேஸி மோகனின் மனைவி நளினி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவை அடுத்து நடிகர் கமல்ஹாசன் சமூகவலைதளத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.